அம்பிகை ஏன் தழுவிக் குழைந்தாள்?
கும்பகோணத்திற்கு அருகே உள்ள பாடல் பெற்ற சிவத்தலமான பட்டீஸ்வரம் கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது திருசத்திமுற்றம் கோயில். இறைவன் சிவக்கொழுந்தீசர், இறைவி பெரியநாயகி அம்மை. காஞ்சீபுரத்தில் அம்பிகை குழைந்து இறைவனைத் தழுவியது போலவே திருசத்திமுற்றத்திலும் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன் அம்பிகையை சோதிக்க எண்ணி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார்.
உடனே இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அருளினார். சக்தி குழைந்து இறைவனைத் தழுவியதால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. அதோடு இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்த அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார் இறைவன். தீப்பிழம்பாய் எழுந்து நிற்பது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இறைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலித்தார். அன்னை தழுவி முத்தமிட்டதால் ‘சக்தி முத்தம்‘ எனப்பட்டு, பிறகு ‘சத்தி முற்றம்’ என்று மருவிவிட்டது.
மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவாயிலின் வலதுபுறம் அம்பிகை சிவனை தழுவிய கோலத்தில் ஒரு சந்நதி உள்ளது. அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடுகிறது.

0 கருத்துகள்