இல்லறம் சிறக்க செய்ய வேண்டியவையும் செய்ய கூடாதவையும்
பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் மூன்றாம் மாதம் முதல் அவர்களது கணவர் கடலில் குளிக்கக் கூடாது.குடும்ப உறுப்பினர்கள் வெளியில் புறப்பட்டுச் செல்லும் பொழுது, ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்கக் கூடாது. புறப்படுவதற்கு முன்னதாகவே கேட்டுக் கொள்வது நல்லது.
குழந்தைகளைப் பார்த்து ‘நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?’ என்று பாரபட்சம் காட்டி பேசக்கூடாது. ஏனைய குழந்தைகளுடன் எமது குழந்தைகளை ஒப்பிட்டு பேசக்கூடாது. அவ்வாறு பேசும்போது குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகின்றது.
அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள். இந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும். மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பின்னர் வந்தவர்களுக்கு கொடுக்கவும்.
வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.
0 கருத்துகள்