வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பு அல்லது கிண்ணங்களில் நீர் வைப்பது வழக்கமாக உள்ளது. பொதுவாக புண்ணிய நதிகளின் நீரையே இதற்கு பயன்படுத்த வேண்டும். எனினும் அதற்கு எல்லோருக்கும் வசதி இருக்காது என்ற வகையில் வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும்.
பூஜை முடிந்ததும் அதனை பக்தியுடன் பருக வேண்டும். அத்துடன் ஒரு உருண்டை சாதம், கற்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு என்பனவற்றையும் படைக்க வேண்டும்.
‘ப்ர’ என்றால் ‘கடவுள்’. நாம் படைக்கும் வெறும் சாதம், ‘ப்ர’ என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, ‘ப்ரசாதம்’ (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும் பருகும்போதும் எம்மை தீய சக்திகள் அணுகாது என்பதுடன் மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை.
0 கருத்துகள்