பொதுவாக மரத்தின் அடியில் கடவுள் வைத்து வணங்குவதை கிராமப் புறங்களில் அதிகமாக நாம் பார்த்திருப்போம்.
அதுவும் விநாயகர் சிலையை குளக்கரையில் இருக்கும் அரசமரத்தின் அடியில் வைத்து வணங்கி வருவார்கள்.
இந்த வழிபாட்டு முறைகள், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பின்பற்றி வந்தாலும் அதற்கான ஒரு சுவாரஸ்ய உண்மை உள்ளது.
அரசமரத்தடி விநாயகரை வணங்குவது ஏன்?
அரசமரத்தின் நிழல் படிந்த நீரில் குளிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. மேலும் இந்த மரத்தில் இருந்து வரும் காற்று பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது.
இதனால் தான் குளக்கரையில் உள்ள அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து, அந்த அரசமரத்தை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.
0 கருத்துகள்