கண் திருஷ்டி ஆகிய தீய விளைவுகளிலிருந்து காக்கும் ஆகாச கருடன் கிழங்கு
ஆகாச கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம், செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறிய சக்தி வந்தால், இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி சுருங்கி கெட்டுவிடும்)
அப்படி சுருங்கிக் கெட்டுவிட்டால், மற்றொரு ஆகாச கருடன் கிழங்கை உடனே மாட்ட வேண்டும். இந்தக் கிழங்கு நன்றாகத் தழைத்து வந்தால், வீட்டில் உள்ள தீய சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் பெருகுவதாக அர்த்தம்
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கிழங்கைக் கயிற்றில் கட்டித்தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சி கொடி வீசித் தளிர்க்கும்.
சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விஷம் பங்கப்படும். அவ்வளவு சக்திகொண்டது இந்த ஆகாச கருடன் கிழங்கு.
0 கருத்துகள்