வீட்டில் பறவைகள் கூடு! பலன் கொடுக்கும் தெய்வசக்தி!
Want create site? Find Free WordPress Themes and plugins.
புது வீடு கட்டி குடிபோகும் போது பல்வேறு பூஜைகள் செய்யப்படுகிறது. ஏனெனில் புது வீடு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது. மண்ணிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது தெரியாது.
ஆனால், சில பறவைகளுக்கு அதை அறிந்து கொள்ளும் ஞானம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும், சிட்டுக்குருவி, புறா, அணில் போன்றவைகளுக்கு அதை உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
மேலும், ஒரு புது வீடு கட்டி குடிபோகும் போது அந்த வீட்டில் ஏதாவது ஒரு ஜீவசக்தியை கொண்டு வர வேண்டும். மனிதனை தாண்டி சிட்டுக்குருவிக்கு ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது.
நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும்.
அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கணாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லதா? கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள்.
இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது, இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே வீட்டில் தெய்வசக்தியை உணர முடியும்.

0 கருத்துகள்