ஆயுள்விருத்தி தரும் தெற்கு குபேரர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி கோவிலில் அருள்பாலிக்கும், தெற்கு நோக்கிய குபேரரை, பூசம் நட்சத்திரத்தன்று வழிபட்டால், ஆயுள்விருத்தி கிடைக்கும்.
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு கோவில் அமைக்க ,மக்கள் விரும்பியதால், இக்கோவில் கட்டப்பட்டது. ‘திரு’ என்றால் மகாலட்சுமி, எனவே ‘திருநகர்’ என்று பெயர் அமைந்த பகுதியில் இக்கோவில் கட்டப்பட்டது.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமி முன் இரு திருக்கரத்தில் அபய வரத முத்திரையுடனும், பின் இரு திருக்கரங்களில் தாமரை மொட்டும் ஏந்தி சதுர்புஜத்தில், பத்மாசன கோலத்தில் அமர்ந்து கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
பங்குனி உத்திரத்தன்று தாயாருக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தப்படும். இதற்கு, மறுநாள் திருமணம் ஆகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் காப்பு கட்டப்படும். இதன் மூலம் திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது..
செல்வம் தரும் குபேரனுக்குரிய திசை வடக்கு என்று கூறப்படும் நிலையில், இங்கு தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கி ஆயுள் விருத்தியைத் தரும் குபேரனுக்கு, பூசம் நட்சத்திரத்தன்று பூஜை நடத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்