உங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் - சதயம்

  சதயம்

 
    சதய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

கடம்பனூர்:

 சூரபத்மனை அழித்ததால் ஏற்பட்ட சூரஹத்தி தோ~ம் நீங்க, முருகப் பெருமான் ஐந்து தலங்களில் சிவபிரதி~;டை செய்து வழிபட்டார். அந்த திருத்தலங்கள் நாகை மாவட்டத்தில் உள்ளன. ஆவை கோவில் கடம்பனூர், அங்கெல்லாம் வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான். சுதய நட்சத்திர அன்பர்கள் அருள் வேண்டி முரகனை இங்கு வழிபடலாம்.
கடம்பர்கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் அமைந்துள்ள கடம்பை, தட்சிணகாசி என அழைக்கப்படும் தலம். தல விருட்சம் கடம்ப மரம். கடம்பவனநாதராக, ஈசன் முலையம்மையோடு அருள் பாலிக்கும் திருத்லதம்.

மேலக்கடம்பூர்:

 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலுக்கு தென்மேற்கில் 5கி.மீ தொலைவில் தேர் வடிவில் அமைந்த திருத்தலம். அமிர்தகடேஸ்வரராக ஈசன் அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்;த இந்திரன், தன் தாயார் தினமும் விழிபடுவதற்காக, தேருக்குச் சக்கரங்களை மாட்டி குதிரைகளைப் பூட்டி இழுத்துச் செல்ல முற்படுகையி;ல், விநாயகர் கட்டை விரலால் அழுத்திட, அது நின்றுவிட்டது. அப்போது கோடிலிங்கங்களை பிரதிஷ்டை செய்யுமாறு இந்திரனைப் பணித்தார் விநாயகர். அருகிலேயே ருத்ரகோடீசுவரரை பிரதிஷ்டை செய்து விமோசனம் பெற்றான் இந்திரன்.

பிட்சாண்டார் கோயில்:

 திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6கி.மீ. தொலைவில் உத்தமர்கோவில் என அழைக்கப்படும் வைணவத்தலமும் அமைந்துள்ள மும்மூர்த்தித் தலம். பிரம்மா, சரஸ்வதிக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

கூடல்:

 மதுரை மாநகரில் அமைந்துள்ள வைணவ திவ்யதேசம். ‘கிருத மாலா’ எனும் ஆறு இரண்டாகப் பிரிந்து இந்தத் தலத்தை மாலைபோல் சுற்றி வந்து மீண்டும் ஒன்று சேருவதால், கூடல் என்று பெயர் பெற்றது. கடம்ப மரம், தல விரட்சம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த, நின்ற மற்றும் சூரிய நாராயணன் ஆக மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார் வைகுந்தநாதர். தாயார்:மதுரவல்லி.
               
  நட்சத்திர மந்திரம்

வருணம் வரதம் வந்தே ஸீதாகலச தாரிணம்|
  பாசஹஸ்தம் சதபி~க் தேவதாம் தேவ வந்தி தம்||
  
 மிருத்யுஞ்சய மந்திரம்

  மிருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பN;வ|
  அமிர்தேச்வராய சர்வாய மகாதேவாய நம||

கருத்துரையிடுக

0 கருத்துகள்