விசாகம்
விசாக நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கபிஸ்தலம்: தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு வடக்கே 3கி.மீ. தெ;hலைவில், கும்பகோணம் - திருவையாறு சாலையில் அமைந்த வைணவ திவ்ய தேசம். விளா மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கபிஸ்தலம் என்று பெயர்பெற்றது. வாலிக்கு எம்பெருமான் காட்சியளித்த தலம். மூலவர், கஜேந்திரவரதப் பெருமாள், கிழக்கு நோக்கி, பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார். தாயார் ரமாமணிவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி.
அத்தாளநல்லூர்:
நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்கு வடகிழக்கே 7கி.மீட்டரில் அமைந்துள்ளது. ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவரதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இவர், வழிப்போக்கருக்கு ‘அத்தாழம்’ என்ற இரவு உணவை அருளியவர்.
தீயத்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலுக்கு அருகில் உள்ளது. தீயும் (அக்னி) அயனும் (பிரம்மா) வழிபட்ட திருத்தலம். சகஸ்ரலட்சுமீசுவரர் அருள் பாலிக்கிறார்.
திருநின்றியூர்:
மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். லட்சுமிபுரீசுவரர் - உலகநாயகி அருள் பாலிக்கும் தலம்.
அதிதேவதை மந்திரம்
இந்திராக்னி ஸீபதௌஸ்யாதாம்
விசாகா தேவதே உபௌ|
வராவேகரதாரூடௌ வராரபீதி கராம் புஜௌ||
~ண்முக காயத்ரி
ஓம் தத்புரு~hய வித்மஹே மஹாஸேனாய தீமஹி|
தந்நோ ~ண்முக ப்ரசோதயாத்||

0 கருத்துகள்