உங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் - அனுசம்

    அனுசம்
 

     அனுசம்  நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருவொற்றியூர்:

 சென்னைக்கு வடக்கே 8கி.மீ. தெ;hலைவில் உள்ளது. புற்றிடங்கொண்டார். ஆதிபுரீசுவரராக அருள் பாலிக்கும் தலம். தலவிருட்சம் - மகிழ மரம்.

திருவண்ணாமலை:

 திருமாலும், நான்முகனும் அடி – முடி தேடியபோது, அவர்களுக்கு எட்டாமல், அண்ணாமலையாக இறைவன் தோன்றிய தலம். அஷ்டவசுக்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருப்புனவாசல்:

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கே 38கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கு நான்கு தல விருட்சங்கள் உள்ள பதி. தஞ்சை பிரகதீசுவரருக்கு அடுத்ததாக பெரிய லிங்கத் திருமேனி. ஆகண்டல விநாயகர், சதுர்முக லிங்கம், விநாயகர் சபை, குடவரை காளி ஆகிய சிறப்புச் சந்நிதிகள் கொண்ட கோயில்.  

திருக்கண்ணமங்கை

: திருவாரூருக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. தல விருட்சம் - மகிழ மரம். முப்பத்து முக்கோடி தேவர்களும் தேனீக்களாக வந்து சேவிக்கும் திருத்தலம். பக்தவத்சலப் பெருமாளும், அபிசேகவல்லித் தாயாரும் சேவை சாதிக்கும் ஸப்தாம்ருத சேத்திரம்.

நீடூர்:

 மயிலாடுதுறைக்கு வடக்கே 5கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்டது. ஊழிக்; காலத்தும் அழியாததால், நீடூர் ஆனது. லட்சுமிநாராயணபெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

நாச்சியார்கோயில்:

 கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ.தொலைவில், திருமலைராயன் ஆற்றின் வடகரையில் உள்ளது. திருநறையூர், தல மரம்-மகிழ மரம். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள், தாயாருக்கு மாலையிடும் நிலையில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கல் கருடன் ஆகியவை சிறப்புச் சந்நதிகள்.
         
    அதிதேவதை மந்திரம்

 மித்ரம் பத்மாசனாரூடம் அனூராதேஸ்வரம் பஜே|
சூலாங்கு ச தரம் பாஹ்வோ: தேவம் ஸோநித வர்ணகம்||
    
 சூர்ய காயத்ரி

 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
 தந்நோ சூர்ய ப்ரசோதயாத்||

கருத்துரையிடுக

0 கருத்துகள்