கேட்டை

வழுவூர்:
வராஹ காயத்ரி
பூவராஹாய வித்மஹே வஜ்ர ரூபாய தீமஹி|

கேட்டை நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
பிட்சாணடார் கோயில்:
திருச்சிக்கு வடக்கில் 6கி.மீ தொலைவில் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. உத்தமர் கோயில் எனப்படும் மும்மூர்த்தித் தலம். பிட்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு நோக்கியும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். திருமகளே ஈசுவரனுக்கு பிட்சை அளித்ததாக தல புராணம் கூறுகிறது. சப்த குருத்தலம் என்றும் பெருமை கொண்டது. சரஸ்வதி தேவிக்கு இங்கே தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள புத்திரகாமேஷ்டீஸ்வரர், தசரதனால் வழிபடப்பட்டவர். இவர், மக்கட்பேறு வழங்கிடும் மகேசன்.
வழுவூர்:
ஈசன், யானையை உரித்து, முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்த திருத்தலம். மயிலாடுதுறைக்கு தெற்கே 8கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்த்தம் இரண்டும் தனிச்சிறப்பு கொண்டவை. ஈசன் ‘கிருத்திவாசன்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். ‘கஜ சம்ஹார மூர்த்தி’ தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாட்களில் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். வில்லேந்;திய கோலத்தில் சனீஸ்வரனை இங்கு வழிபடலாம்.
அதிதேவதை மந்திரம்
இந்திரம் கஜவராரூடம் வஜ்ரபாச வசபயம்|
கரே: சதுர்பி: ததம் ஜ்யேஷ்டாதீச்வர மாஸ்ரயே||
வராஹ காயத்ரி
பூவராஹாய வித்மஹே வஜ்ர ரூபாய தீமஹி|
தந்நோ வராஹ ப்ரசோதயாத்||
0 கருத்துகள்