உங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் - மூலம்

  மூலம்

    
          மூல நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருமாந்துறை:

 திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5கி.மீ தொலைவில் உள்ள வடகரை மாந்துரை எனப்படும் தலம். ஆம்ரவன ஈசுவரரே திருமாந்துறை நாதர்: அன்னை அழகம்மை.

ஆச்சாள்புரம்:

 சீர்காழிக்கு அ;ருகில் உள்ள திருத்தலம், சிவலோகத் தியாகேசர் அருள் பாலிக்கும் தலம். இந்தக் கோயிலில் திருஞானசம்பந்கர் திருமணம் மற்றும் சிவஜோதி தரிசன ஐக்கிய நிகழ்ச்சிகள், வைகாசி மூல நட்சத்திரத் திருநாளில் நடைபெறுகின்றன.

மயிலாடுதுறை:

 மயூரநாதர், அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் திருத்தலம். இங்கே முடவன் முழக்கு, துலா ஸ்நானம் தனிச்சிறப்பு பெற்றவை.

பாமணி:

 பாதாளேச்சுரம் எனப்படும் இந்தத் திருத்தலம் மன்னார்குடியிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாளத்திலிருந்து ஆதிசே~ன் தனஞ்ஜெய முனிவராக வெளிப்பட்ட தலம். சர்ப்ப தோ~ம் நீக்கும் தலம். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

கோயிலூர்:

 திருத்துறைப்பூண்டி – ஓரத்தநாடு வழியில் உள்ள தலம். ராமபிரான், சேதுப் பாலம் கட்டுவதற்கு முன்பு, இறைவனிடம் இந்தத் தலத்திலதான் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு, மந்திரபுரீசுவரர் - பெரிய நாயகி அருள் பாலிக்கும் தலம். ‘சூதவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

குலசேகரப்பட்டினம்:

 திருச்செந்தூருக்கு 14கி.மீ. தொலைவில் உள்ளது. விஜயகாசிகொண்ட பாண்டீசுவரர் - அறம் வளர்த்த நாயகி அருள் பாலிக்கும் தலம்.

பொழிச்சலூர்

 சென்னைக்கு தெற்கில், பல்லாவரத்துக்கு மேற்கில் 3கி.மீ தொலைவில் அகஸ்தீசுவரர் - ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் தலம்.
              
     நட்சத்திர மந்திரம்

     கராள வதனம் க்ருஷ்ணம் ந்ருவாகனம்|
     ஊர்த்வகேசம் விருபனாஷ்ம் பஜே மூலாதி தேவதாம்||
     
ஆஞ்சநேய காயத்ரி

     ஸ்ரீஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி|
     தந்நோ அனுமத் ப்ரசோதயாத்||

கருத்துரையிடுக

0 கருத்துகள்