துரதிஷ்டம் என்பது என்ன? எதனால் ஏற்படுகின்றது?

thanjavur-temple-1

ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் இடம்பெறும் கஷ்டமான நிலைகளை துரதிஷ்டம் என்று கூறுகின்றோம். அவ்வாறு ஒருவருக்கு ஏற்படும் துரதிர்ஷடமானது அவர்களின் வாழ்வில் கடுமையான வறுமையையும் கஷ்டங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் துரதிஷ்டம் நாம் செய்யக் கூடிய ஒருசில தவறான செயல்கள் மூலம் தான் ஏற்படுகின்றது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
துரதிஷ்டம் ஏற்படாது இருப்பதற்கு நாம் செய்யக் கூடாத செயல்கள் சிலவற்றை இங்கு பார்போம்.
சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொடக்கூடாது. அவ்வாறு தொடும்போது, எதிர்மறை ஆற்றல்கள் தோன்றுவதோடு, நாம் செய்யும் அனைத்து செயல்களும் துரதிர்ஷ்டமாக நடக்கும்.
நாம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களை தரையில் சிதற விடக்கூடாது. சிதறுப்பட்டுள்ள உணவுகளை மிதிக்கும்போது அது மிகப்பெரிய பாவச் செயலாகும். இதனால் எம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்து கொள்ளும்.
நாம் ஒரு இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போது, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தவறாமல் குளித்துவிட வேண்டும். ஏனெனில் அது முடிவற்ற துர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்