வீட்டில் தீபமேற்றும் முறைகள்

201610261422339304_diwali-deepam-worship_SECVPF

காலையில் உஷத் காலத்திலும் மாலையிலும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்.
திரியை சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்குத் திசை நோக்கியும் வடக்குத் திசை நோக்கியும் தீபமேற்ற வேண்டும். தெற்கு எமனுடைய திசை என்பதால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக் கூடாது. ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.
புதிய மஞ்சள் துணி திரிபோட்டு விளக்கேற்றினால் – செய்வினை பில்லி சூனியம் பேய் பிசாசு அண்டாது.
பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்றினால்  – மங்களம்
வாழைத்தண்டு திரி-  புத்திர பாக்கியம்
பட்டுநூல் திரி எல்லா வித சுபங்களும்
ஆமணக்கு எண்ணெய் தீபம் அனைத்து செல்வம்
தேங்காய் இலுப்பெண்ணெய் தீபம் தேக ஆரோக்கியம்
நல்லெண்ணெய் தீபம் யமபயம் அகலும்
தாமரை நூல் திரி இலட்சுமி கடாட்சம்
நெய் தீபம் சகல சௌபாக்கியம்
நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜை அறையில் வைத்தல் நல்லது.
வெண்கல விளக்கு பாவம் தீரும்
அகல் விளக்கு சக்தி தரும்
தீப சரஸ்வதி என்று மூன்று முறையும் தீப லட்சுமி என்று மூன்று முறையும் தீப துர்க்கா என்று மூன்று முறையும் குலதெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரெண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தீபத்தை வாயால் ஊதியணைக்காமல் ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்